பிரிட்டனில் செவிலியர்
ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மீது
கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து பொலிசார் பரிசீலித்து வருகின்றனர்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த
மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா. அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர். அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது. இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது லண்டனில் பெரிய பிரச்னையாக வெடித்தது. ஜெஸிந்தா மரணம் குறித்து லண்டன் பொலிசார் விசாரித்து வருகின்றனர். வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியுமா என கேட்டு, Prosecution துறையிடம் கருத்து கேட்டுள்ளனர். அந்த துறை ஒப்புதல் அளித்தால், ரேடியோ ஜாக்கிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிகிறது. இதற்கிடையே ஜெஸிந்தா மரணம் தொடர்பாக கிங்எட்வர்டு மருத்துவமனை மற்றும் அவுஸ்திரேலியா ரேடியோ நிறுவனத்துக்கு 60 கேள்விகளை கேட்டு ஜெஸிந்தா குடும்பத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர் |
திங்கள், 24 டிசம்பர், 2012
மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக