இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். |
தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும்,
தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார். இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கும் வலிமையை பெற பிரார்த்திக்கின்றேன். அதே வேளையில், அவரது மரணம் வீணாகிப் போகும் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது. இதை போன்ற சம்பவம், இனி எப்போதுமே ஏற்படாது என்ற பாதுகாப்பை தருவதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தனது அனுதாப செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதேவேளையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கிடைக்க வழி செய்வோமென கூறியுள்ளனர். |
சனி, 29 டிசம்பர், 2012
இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக