siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பிரான்ஸ் நடத்திய தாக்குதல் தோல்வி: 17 பயங்கரவாதிகள்

பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த உளவாளியை மீட்பதற்காக சோமாலிய பயங்கரவாதிகளுடன் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பலன் தரவில்லை. இந்த மோதலின்போது, 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணைக் கைதியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் தரப்பில் அதன் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த அதிரடி தாக்குதலை பிரான்ஸ் ராணுவத்தின் டிஜிஎஸ்இ ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு மேற்கொண்டது. இது குறித்து, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன்-வெஸ் லீ டிரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் உளவாளி டெனிஸ் அலெக்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டு சோமாலிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டுகளாக அவரை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வரும் அலெக்ûஸ மீட்பதற்காக, டிஜிஎஸ்இ ரகசிய படையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர் என்றார். எனினும், பிணைக் கைதி அலெக்ஸ் உயிரிழந்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ஷெபாப் பயங்கரவாத அமைப்பு, அடுத்த 2 நாள்களில் அலெக்ஸின் தலைவிதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு தனது ராணுவ வீரர்கள் மீது எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தங்களது வீரர்களை பலிகொடுத்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது என்று ஷெபாப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

0 comments:

கருத்துரையிடுக