ஜேர்மனியில்
வேலைபார்ப்போர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கை
ஒன்று சுட்டிக்காட்டியது.
கடந்த வருடம் 41.5 மில்லியன் பேர் வேலை பார்த்து வந்த நிலையில் 416,000 பேருக்கு
இந்த ஆண்டு புதிதாக வேலை கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு 1 சதவீதம் பேருக்குக் கூடுதலாக வேலை கிடைத்திருக்கிறது. யூரோ மண்டலக்கடன் நெருக்கடி காரணமாக வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டு உழைப்பாளர் சந்தையும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும்போது வேலைபார்ப்போரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த வருடம் 2.34 மில்லியன் பேர் வேலை இல்லாமல் இருந்தனர். இந்த ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 162,000 ஆகக் குறைந்துவிட்டது, என்று புள்ளியியல் துறை தகவலறிக்கை தெரிவிக்கின்றது |
வியாழன், 3 ஜனவரி, 2013
வேலை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக