நடுரோட்டில்விழுந்தகிடந்தஇளம்பெண்கள்இங்கிலாந்தில் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் குடிபோதையில் நடுரோட்டில் போதை தெளியாமல், சுயநினைவு இன்றி விழுந்து கிடந்ததாக காவல்துறை உயரதிகாரி Superintendent James Tozer என்பவர் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வன்முறை எதுவும் நிகழாவண்ணம் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது.
புதுவருடம் பிறந்தவுடன் நள்ளிரவு 12 மணிமுதல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் துவங்கியவுடன், இளம் ஆண்களும் பெண்களும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்கத் தொடங்கினர். மதுபோதையில் அறைகுறை ஆடையுடன் நடு ரோட்டில் அவர்கள் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தினம் என்பதால் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரவர் வீடுபோய் சேர இங்கிலாந்து போலீஸார் உதவி செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என அந்த அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக