siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 2 மார்ச், 2013

போதைப்பொருள் கடத்தல் தலைவன் உட்பட 4



மியான்மர் நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ் கம், தாய்லாந்தை சேர்ந்த போராளிகளின் துணையுடன் கடந்த 2011-ஆம் அக்டோபர் மாதம் சீனாவுக்கு உட்பட்ட மேகாங் நதி பகுதியில் 2 சீன சரக்கு கப்பல்களை தாக்கி அதில் பணியாற்றிய 13 பேரை ஈவிரக்கமின்றி கொன்று கப்பலில் இருந்த சரக்குகளையும் கொள்ளையடிது அந்தக் கப்பலையும் கடத்திச் சென்று மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்து வந்தான்.
அந்த நாடுகளை சேர்ந்த போலீசாரின் துணையுடன் சீன பொலீஸார் 8 பேரை கைது செய்து சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட நவ் கம், சாங் காம் (தாய்லாந்து), யீ லாய் (நாடற்றவன்), சாசிக்கா (லாவோஸ்) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட கப்பல் ஊழியர்களின் குடும்பத்திற்கு 9 1/2 லட்சம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாகவும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இவர்களின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், மரண தண்டனையை உறுதிசெய்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் விஷஊசி போட்டு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

0 comments:

கருத்துரையிடுக