siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 4 மார்ச், 2013

குழு தாக்கியதில் மலேசியாவில் 5 பொலிஸார்,,,


மலேசியாவின் கிழக்குப்பகுதி சாபா மாகாணம் போர்னியோ தீவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம், லஹாத் டாடு மாவட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 100 பேர் படகில் வந்து இறங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களை சூலூ ராயல் ராணுவம் என்று சொல்லிக்கொண்டு அப்பகுதி கிராமம் ஒன்றை ஆக்கிரமித்து கொண்டதோடு இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கு 19 நூற்றாண்டு பதிவேடுகளை அவர்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், நேற்று இரவு பொலிஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பொலிஸாரும், 2 ஆயுதம் ஏந்தியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 12 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும், 2 மலேசியா பொலிஸாரும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சாபா மாகாணம், 1800-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மன்னர் சூலு ஜமாலுல் கிராம் சூல்தானின் கட்டிப்பாட்டில் இருந்து, பின்னர் 1963-ம் ஆண்டு மலேசியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக