siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 23 மார்ச், 2013

நாட்டின் பாதுகாப்பிற்கிணையாக பேண ???


பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உலகநாடுகள் தடுமாறுகின்றன. இத்தேவைகளில் முக்கியமானவை உணவும், தண்ணீரும்தான். இதில் ஒரு மனிதனுக்கு 50 முதல் 100 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகின்றது என்று உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது.முதன்முறையாக, ஐ.நா அமைப்பு நீர் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு செயல்முறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக வானிலை மையத் தலைவரும் ஐ.நாவில் நீர்வளம் குறித்த தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் ஆன மைக்கேல் ஜராட், ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இணையாக அந்நாட்டின் நீர்வள ஆதாரங்களும் கருதப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான நீர் தொடர்ந்து கிடைப்பது, அது குறித்த பிரச்சினைகள் விலக்கப்படுவது, சுற்றுப்புற சூழலைப் பாதுகாத்து நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபடுவது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகில், 145 நாடுகள் தங்களுடைய நீர் ஆதாரத்தை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன என்று கூறிய அவர் இதுபோல் உள்நாட்டிலேயே மறைந்து கிடக்கும் 300க்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்களை அந்தந்த நாடுகள் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். 7 மில்லியனாக இருக்கும் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டிற்குள் 9 மில்லியனாகப் பெருகக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தட்பவெப்பநிலை மாறுபாடு பஞ்சம், நோய்கள் போன்ற இயற்கை அழிவுகள் தண்ணீர் பிரச்சினையை அதிகரிக்கின்றன. 2010ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 2000க்கும் மேற்பட்ட மக்களைப் பலி வாங்கியது. 2011ல், 1,85,000 சோமாலிய மக்கள் தங்களின் உணவு, நீர்த்தேவைக்காக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
2012ல், தெற்கு சூடானில் ஏற்பட்ட கலவரத்திற்கு தண்ணீர் பிரச்சினையும் ஒரு காரணமாகும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பற்றாக்குறை உணவுப்பொருட்களின் விலையை உலகளவில் அதிகரிக்கச் செய்தது. தண்ணீரினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 3.5 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.
பிரேசில், பராகுவே, உருகுவே, அர்ஜென்டினா ஆகிய நாடுகள், ஒரு மில்லியன் சதுர பரப்பளவில் அமையப்பெற்ற குவரானி நீர்ப்பரப்பை, தங்களுக்குள் எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் பகிர்ந்து கொள்வதாக, கடந்த 2010ல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதை, மைக்கேல் நீர்ப்பிரச்சினைகளில் ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக