ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் பாசி பதவி வகித்து வருகிறார்.
இவரது ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 2 மாதங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், பன்குயி நகரை நேற்று முற்றுகையிட்ட புரட்சிப் படையினர், ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றினர்.
ஜனாதிபதி மாளிகை புரட்சிப் படையினர் வசம் வந்ததாக அறிவித்த தளபதி டுஜோமோ நர்கோயோ, ஜனாதிபதி பிரான்கோயிஸ் பாசி மாளிகையை விட்டு தப்பியோடி விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, உள்ளூர் வானொலி மூலம் புரட்சிப் படையின் தலைவர் மைக்கேல் டுஜோடோடியா உரையாற்றுவார் என கூறிய அவர், இன்றுடன் எமது ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது. போராளிகள் அனைவரும் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக