சுவிட்சர்லாந்தில் சிறப்பு மருத்துவர்களுக்கான மூன்றாண்டுத் தடையை மாநிலங்களவை மீண்டும் உறுதி செய்துள்ளது.
சுவிஸ் செய்தி நிறுவனமான SDA மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் படையெடுத்து வருவதாக சில மாநிலங்கள் புகார் கூறுகின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட்ட சுதந்திரப் பயணத்தின் விளைவால் எல்லையோர மாநிலங்களில் மருத்துவர்களின் ஊடுருவல் அதிகமாகி விட்டதால் கடந்த 2011ம் ஆண்டு சிறப்பு மருத்துவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதன்கிழமை கூடிய தேசியக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில் 103 பேருக்கு 76 பேர் இந்த அனுமதி மறுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சிறப்பு மருத்துவர்களால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் ஃபிராங்க் கூடுதலாக காப்பீட்டுத் துறைக்குச் செலவாகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட்(Alain Berset) கூறுகையில், சிறப்பு மருத்துவர்கள் கூடுதலாக இருக்கும் மாநிலங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீண்டும் வருகின்ற ஏப்ரல் மாதம் அனுமதி மறுப்பு நடைமுறைக்குப்படுத்தப்பட்டு அத்தடை எதிர்வரும் 2016 வரை நீடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக