siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 9 மார்ச், 2013

பிரிட்டனில் சிகரெட் பிடிப்பது குறைந்துவிட்டது


கடந்த நாற்பதாண்டுகளில் பிரிட்டனில் புகைப்பழக்கம் பாதியாகக் குறைந்துவிட்டது என்றும் குடிப்பழக்கம் கனிசமானக் குறைந்துள்ளது எனவும் பொது வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த 1947ம் ஆண்டுகளில் ஏறத்தாழ பாதிப்பேர் சிகரெட் புகைத்துள்ளனர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு ஐந்தில் ஒருவர் மட்டுமே புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
வாரத்துக்கு ஐந்து நாட்கள் மது அருந்தியவர் கடந்த 2005ம் ஆண்டு 22 சதவிகிதம் ஆக இருந்த எண்ணிக்கை கடந்த 2011ம் ஆண்டு 16 சதவிகிதம் ஆகக் குறைந்துவிட்டது.
புகைப்பதால் நுரையீரல் புற்றுநோயும், இதயநோயும் வர வாய்ப்பிருப்பதாகத் திரும்பத்திரும்ப விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
பணித்தலங்களில் புகைக்கக்கூடாது என்று பிரிட்டன் முழுக்க தடை விதிக்கப்பட்டதும், சிகரெட் விளம்பரத்துக்கு தடை விதித்ததும் புகைப்பழக்கத்தைக் குறைத்துள்ளது.
இலண்டனில் உள்ள கிங்ஸ்கல்லூரியின் பொதுசுகாதாரப் பிரிவின் கௌரவப் பேராசிரியராக இருக்கும் ஆலன் மர்யோன் டேவிஸ்(Alan Maryon-Davis) கூறுகையில், புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் குறைந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும் இன்னும் குறையவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், மதுவுக்கு விலையில் தள்ளுபடி தருவதை நிறுத்திவிடவேண்டும் ஏனென்றால் விலை குறையும்பொழுது குடிக்கும் அளவு அதிகமாகின்றது என்றும் மருத்துவமனைகளில் மதுதொடர்பான நோய்ப் பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் நுரையீரல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான டொக்டர் பென்னி உட்ஸ்(Penny Woods) கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளில் விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களும், அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், புகைப்பழக்கத்தைக் குறைத்திருப்பதால் ஆபத்தான நோய்களும் அகால மரணமும் தடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக