கனடாவிலுள்ள டொரொண்ட்டோவில் அமைந்துள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரவு எட்டு மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
யார்க்டேல்(Yorkdale) என்ற பரபரப்பான வணிக வளாகத்தில் இரண்டு கோஷ்டியினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மிக்கேல் நிகியுயென்(Michael Nguyen) என்பவர் பலியானார். அவரது உடலை நேற்று காலை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ராப் நார்த்(Rob North) கூறுகையில், வணிக வளாகத்திற்குள் இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அச்சண்டை துப்பாக்கிச் சூடாக வெடித்துள்ளது என்று விளக்கிக் கூறினார்.
மேலும் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யார்க்டேல் வணிக வளாக நிர்வாகம் பொலிசாருடன் ஒத்துழைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக