திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தாண்டை வரவேற்று போடப்பட்ட பட்டாசு ஒன்று அருகில் உள்ள வீட்டில் விழுந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு போட்ட நபரின் குடும்பத்திற்கும் பட்டாசு விழுந்த வீட்டு குடும்பத்திற்கும் இடையில் சண்டை மூண்டுள்ளது.
இச்சண்டை விரிவடைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகள் மேலதிக சிகிச்சைகளுக்கென கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக