பிரிட்டன் ராணி எலிசபத் தனது பிறந்த நாளை அரண்மனையில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.
ராணி எலிசபத்தின் சரியான பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21ம் திகதியாகும். ஆனால், அதிகார பூர்வமான பிறந்த நாள் யூன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தனது 87வது பிறந்த நாளை தனிப்பட்ட முறையிலான விழாவாக அரண்மனைக்குள் எளிமையாக கொண்டாட ராணி முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் இன்று அறிவித்துள்ளது.
நாளை(ஞாயிறு) நள்ளிரவு 12 மணியளவில் ராணியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் விண்ட்சர் கிரேட் பார்க் பகுதியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படுகின்றது.
இதே போல், ஹைடே பார்க் பகுதியில் 41 குண்டுகள் முழங்கவும் லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்கவும் ராணிக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக