அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வடகொரியா நடத்தும் போர் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா தனது அண்டை நாடான தென் கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. பின்னர் தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், வட கொரியாவில் போர் நடப்பதை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களை காப்பாற்றவும் நட்பு நாடுகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது.
மேலும் வடகொரியா தனது பகைமையான போர் அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. இதனால் உலகிலுள்ள மற்ற நாடுகளைப் போல வடகொரியாவும் அடிப்படை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியா அணு ஏவுகணைகளை வருகின்ற நாட்களில் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்க பென்டகனின் உளவு பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக