இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டிற்கான ஏற்பாடு மற்றும் கட்டமைப்பு பணிகளில் குழு தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி எம்.பி., இந்த ஊழல் குறித்து கைது செய்யப்பட்டார். தற்பொழுது இவர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்
இந்த வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரித்து வருகின்றது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் விளம்பர பலகை, ஸ்கோர் போர்டு ஆகியவற்றை அமைத்ததில் 95 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கான கருவிகளை வினியோகம் செய்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மூன்று அதிகாரிகளுக்கும் சம்மன் தயார் செய்து அதை உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ அனுப்பி வைத்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக