வங்கதேச தலைநகர் தாகாவில் எட்டு அடுக்கு கட்டிடம் நொறுங்கி விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தின் தாகா நகரில் ராணா பிளாசா என்ற பெயரில் எட்டு அடுக்கு வணிக வளாகக் கட்டிடம் பத்து நாட்களுக்கு முன் நொறுங்கி விழுந்தது.
இதில் ஏராளமானவர்கள் புதையுண்டனர், 2500 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் 300 கடைகளும், ஐந்து ஜவுளி நிறுவனங்களும், ஒரு வங்கி கிளையும் செயல்பட்டு வந்தன.
முதலில் ஐந்து மாடியாக இருந்த இந்த கட்டிடம் முறைகேடாக எட்டு மாடி கட்டடமாக உயர்த்தப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி இன்ஜினியர்கள், இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கடைகள், அலுவலகங்கள் மட்டுமே செயல்படுவதற்கு ஏற்ற இந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக ஐந்து ஜவுளி மில்கள் இயங்கியுள்ளன.
அதிசக்தி கொண்ட ஜெனரேட்டர்கள் இந்த ஆலையில் இயங்கியதால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை மீறி மேலும் மூன்று மாடிகளை கட்டிய இன்ஜினியர் அப்துர் ரசாக் கானை பொலிசார் கைது செய்தனர்.
இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சோகல் ராணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக