சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த இயந்திரப்படகு இந்தத் தோணியை முந்திக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட உராய்வு காரணமாக அத்தோணி தண்ணீருக்கள் கவிழ்ந்தது. இதில் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர்.
தண்ணீரில் விழுந்த அப்பெண்ணின் கால்கள் இயந்திரப் படகின் சக்கரக் காற்றாடியில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் கால் நசுங்கி இரத்தம் கொட்டியதில் உயிரிழந்துள்ளார்.
ஆனாலும் அந்த மோட்டார் படகு நிற்காமல் போய் விட்டது. அதிலிருந்து பிழைத் தெழுந்த காதலன் இயந்திர படகு உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவரது படகினால் ஒருவர் இறந்ததற்கு இவர் பொறுப்பாவார் என்று வழக்கு தொடரப்பட்டிருப்பதால் படகு உரிமையாளரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
0 comments:
கருத்துரையிடுக