செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை "பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர்.
இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன.
அனுப்பப்பட்ட 45 எலிகள், 15 பல்லிகள் உள்ளிட்ட பிராணிகளில் எத்தனை உயிரோடு இருக்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிடவில்லை.
0 comments:
கருத்துரையிடுக