கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை மருத்துவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை துப்பறிவாளர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தனது கர்ப்பத்தை மறைத்தாகவும் பின்னர் வீட்டில் குழந்தையை O'connor Drive and Bermondsey Road பகுதியில் உடைகள் நன்கொடையாக போடும் பெட்டிக்குள் போட்டதாக கூறப்பட்டுள்ளது.
குழந்தையை பெட்டிக்குள் போட்ட பின்னர் அப்பெண் வயிற்றில் இரத்த தோற்றத்துடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ ஊழியர்கள் நச்சுக்கொடியை கண்டுபிடித்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிசாரின் கூற்றுப்படி தெரியவருகின்றது.
மேலும் சந்தேக நபரான அஞ்சலினா ஸ்பனிடிஸ், ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக