வெள்ளி, 17 மே, 2013
தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை:
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் அளித்த ஊடகப் பேட்டியில், கணவர் இறந்த பின்னர் தனித்து வாழும் பெண்களால் தோட்டத்தைப் பராமரிக்க முடியாது, எந்த வேலையையும் செய்ய இயலாது, எதைச் சொன்னாலும் எரிச்சல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து வந்திருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நஃபீசா ஓ(Nafize Ö) என்பவருக்கு வீடு ஒதுக்கித் தர முடியாது என்று ஹேன்ஸ் தெரிவித்ததால் அந்தப் பெண் மிகவும் கோபப்பட்டுள்ளார்.
இது குறித்து நஃபீசா கூறுகையில், நான் நான்கு பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னால் ஆறு ஆண்களின் வேலையைச் செய்ய முடியும். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு வீடு கிடையாது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையை ஹேன்சுடன் பேசி தீர்த்து வைப்பதாகக் ஹேம்பர்க் தோட்டக்காரர் கழகத்தினைச் சேர்ந்த டிர்க் சீல்மேன்(Dirk Sielmann) என்பவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக