ஞாயிறு, 12 மே, 2013
புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்ட புதிய??
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோர்கள், தம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வர விரும்பினால் அவர்களைப் பராமரிக்கத் தேவையான வருமானம் இருந்தால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்று புலம் பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு அரசு பணம் செலவழிக்க வேண்டியிருப்பதால், சுகாதார நிதி ஒதுக்கீட்டில் 44 சதவீதம் இவர்களுக்கே செலவாகிறது.
எனவே இனி புலம்பெயர்ந்து வருவோர்கள் வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க விரும்பினால் அவர்களுக்கான செலவை செய்ய தகுதி படைத்தவராக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
குறைந்த பட்ச வருமானத்தை விட முப்பது சதவீதம் கூடுதலாக சம்பாதிப்பவராகவும், மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தற்பொழுது முதியவர்களின் மருத்துவ செலவுகளைப் பத்தாண்டுகள் வரை ஏற்றுக் கொள்ள முடிந்த பிள்ளைகளால் மட்டுமே பெற்றோரையோ, தாத்தா பாட்டியையோ வைத்திருக்க அனுமதி உண்டு.
ஆனால் இனிமேல் அவர்களின் இருபதாண்டு மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள தகுதி படைத்த பிள்ளைகளே, முதியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
உடன் பிறந்தவரை கனடா அழைத்து வர புலம்பெயர்ந்தவர்கள் விரும்பினால் அவரை "சார்ந்திருப்பவர்" என்ற அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு தீர்மானித்துள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக