மைக்கேல் ஜாக்சன் தனது தந்தை இல்லை என்று வெளியான செய்தியால் அவரது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாக்சனின் மகளான பாரிஸ் மிகவும் அழகானவர் மட்டுமல்ல, புத்திசாலியான பெண்ணும் கூட. அவர் தற்கொலைக்கு முயன்றது ஜாக்சன் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது. பாரிஸ் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் அடித்துக் கொண்டிருந்த ஜாக்சன் குடும்பத்தினர் ஒன்றிணைந்துள்ளனர். அனைவரும் பாரிஸ் நலமுடன் திரும்புவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே பாரிஸ் மனதளவில் பெரும் உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தாராம். மேலும் தனது குடும்பத்தினருக்கிடையே நிலவி வந்த சொத்துப் பிரச்சினை, சட்ட போராட்டம் அவரை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் தான் மைக்கேல் ஜாக்சனின் எந்தக் குழந்தையும் அவருக்குப் பிறந்ததில்லை என்ற தகவல்கள் வெளியாகி பாரிஸை பெரும் மன உளைச்சலில் தள்ளி விட்டது. ஜாக்சன் எனது தந்தை இல்லையா என்று அவர் புலம்பி வந்தாராம். இதேபோல மேலும் பல விஷயங்களும் பாரிஸின் மன உளைச்சலுக்குக் காரணமாக காட்டப்படுகிறது. இதனையடுத்தே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. |
. |
வெள்ளி, 7 ஜூன், 2013
என் அப்பா இல்லையா? மனமுடைந்து தற்கொலை செய்த மகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக