siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 31 ஜூலை, 2013

தொலைபேசி அழைப்பு 79 பேரின் உயிரை பறித்தது

 
கடந்த வாரம் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி கடந்த வாரம் சென்ற ரெயில் விபத்துக்குள்ளானதில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர்.
66 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்த அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பும் போது தடம்புரண்டு கவிழ்ந்த காட்சியின் சி.சி.டி.வி. பதிவுகள் உலக ஊடகங்களில் எல்லாம் ஒளிபரப்பாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விபத்து நிகழ்ந்த போது ரயில் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிய தகவல் விபத்துக்குள்ளான ரயிலின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிப்பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான் காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். காயங்கள் ஆறி குணம் அடைந்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடந்து ரயிலை இயக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக