siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 8 ஜூலை, 2013

இடைக்கால பிரதமரை நியமிப்பது குறித்து ஆலோசனை


எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ம் ஆண்டு, மிகப் பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டது.
பல மாதங்கள் நீடித்த போராட்டத்தில், முபாரக் பதவியி லிருந்து தூக்கி எறியப்பட்டார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த, முகமது முர்சி, அதிபராக பொறுப்பேற்றார். முகமது முர்சி பதவி ஏற்று ஓராண்டாகியும், நாட்டின் நிலை சீரடையாததால், மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக, தலைநகர் கெய்ரோவில் உள்ள, தாஹிர் சதுக்கத்தில், சமீபத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிக மானவர்கள் கூடி, முர்சி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விஷயத்தில் முர்சி உரிய நட வடிக்கை எடுக்காததால், கடந்த வாரம், இராணுவப் புரட்சி மூலம், அதிபர் பதவியிலிருந்து முர்சி தூக்கி எறியப் பட்டார். தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தலைமை நீதிபதி, மன்சூர் பொறுப்பேற்றுள்ளார்.
எகிப்துநாட்டில் ஜனநாயகம் கோரி போராடியவர்களில்,சர்வதேச அணுசக்தி முகமையகத்தின் முன்னாள் தலைவர், முகமது அல் பாராடியும் ஒருவர்.
எகிப்தில் ராணுவப் புரட்சி மூலம் முர்சி அரசு நீக்கப்பட்டது, ஏற்றுக் கொள்வதற்கு கடினமான விஷயம் தான். எனினும்,உள்நாட்டு கலவரம் ஏற்படுவதைத் தடுக்க வேறு வழியில்லை என, எல்பாராடி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அல் பாராடி, எகிப்து இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த தகவலை, அந்நாட்டு இடைக்கால ஜனரதிபதி மன்சூர் மறுத்துள்ளார். புதிய பிரதமரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்

0 comments:

கருத்துரையிடுக