பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹூசைன், அமான் ரம்ஜான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மதம் தொடர்பான கேள்விகள், விவாதங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு, இதுவரை மொபைல் போன், வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் பரிசாக வழங்கப்படுகிறது.
விவாத நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்தும் முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை, குழந்தையற்ற தம்பதிகளுக்கு பரிசளிப்பதில் தவறில்லை என்கிறார் ஹூசைன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் குழந்தையை பரிசாக பெற்ற ஆயிஷா ரியாஸ் என்ற பெண், இந்த நிகழ்ச்சி தன்னை ஒரு தாயாக முழுமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 3 குழந்தைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற குழந்தைகள் அமைப்பு ஒன்றுடன்இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது {(வீடியோ,புகைப்படங்கள், இணைப்பு})
0 comments:
கருத்துரையிடுக