அல்கைதா இயக்கத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலே அமெரிக்க தூதரங்கள் மூடப்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் சவாஹிரி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செம்டம்பர் 11 இரட்டைக் கோபுரக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே வடஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூடியதாக அமெரிக்கா முன்னர் கூறியிருந்தது.
சுமார் 20 அமெரிக்க தூதரங்கள் மற்றும் கன்சியூலர் அலுவலகங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அபுதாபி, அமான், கெய்ரோ, ரியாத், டஹ்ரான், ஜேட்டா, டோஹா, டுபாய், குவைத், மனாமா, மஸ்கட், சனா மற்றும் த்ரிப்போலி ஆகிய நகரங்களிலுள்ள இராஜதந்திர அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை, யேமனிலுள்ள தமது இராஜதந்திர அலுவலகங்களை பல ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது
0 comments:
கருத்துரையிடுக