siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கனடாவில் நடைபெற்ற ஜி8, ஜி20 மாநாடுகளை உளவு பார்த்த அமெரிக்கா!

கனடாவில் நடைபெற்ற ஜி8 மற்றும் 20 மாநாடுகளை அமெரிக்கா முழுமையாக உளவு பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவின் டொரான்டோ நகரில் 2010ம் ஆண்டு யூன் 26, 27 ஆகிய திகதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது.

இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற ஊடகம் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் கனடாவில் நடைபெற்ற மாநாட்டின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளது என்றும் இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் முழுஒத்துழைப்பு அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010ம் ஆண்டு யூன் 25, 26 ஆகிய திகதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன்,

அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டையும் அமெரிக்கா அமைப்பு உளவு பார்த்துள்ளது என்று கூறியுள்ளது.
 

0 comments:

கருத்துரையிடுக