siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 17 டிசம்பர், 2013

வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை - விமான போக்குவரத்து பாதிப்பு

 இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மலையான எட்னா, எரிமலையாக மாற்றமடைந்துள்ளது. ஐரோப்பாவிலேயே மிக தீவிரமாக உறுமிக்கொண்டிருக்கும் இந்த எட்னா எரிமலையின் முகத்துவாரம் ஆப்பிரிக்க புவி ஓடு மற்றும் யுரேசியா புவி ஓட்டிற்கும் இடையில் விலகும் விளிம்பின் மேல் 3350 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடந்த பலவாரங்களாக வெடித்து சிதறி எரிமலை குழம்பை கக்கிக்கொண்டிருக்கும் இந்த எரிமலை தற்போது சாம்பலை பீய்ச்சி அடித்து வருகிறது. பல கிலோ மீட்டருக்கு இந்த சாம்பல் மேகங்கள் வானில் மிதந்துவருவதால், அருகிலுள்ள கடானியா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், இங்கு வரும் விமானங்கள், புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.
   
கடந்த 1992-ம் ஆண்டு எட்னா எரிமலை வெடித்து சிதறியபோது, அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக