siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஜனவரி, 2014

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை! பெண்ணை கைது

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் நீதிபதியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மீனா பட்டேல், இவரது மகள் குன்டல் பட்டேல்.

இவர் கனேரி வாஃபில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கிழக்கு லண்டனில் வசித்து வரும் இவர், தாமெஸ் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்த போது பொலிசார் கைது செய்தனர்.

கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் பயங்கரவாத தடுப்பு சோதனையின் ஒரு பகுதியாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்டல் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 36 வயதாகும் அப்பெண் ஜனவரி 26ம் திகதி, பயங்கரவாத தடுப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்டார், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பாதுகாப்பு சட்டம் 2001ன் கீழும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்ற விபரங்களை வெளியிட முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குன்டல் பட்டேல் செய்த குற்றம் குறித்து பதிலளிக்க மறுத்த பொலிசார் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது எந்த விபரமும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களுது குடும்பம் பற்றி கருத்து தெரிவித்த அங்குள்ள மக்கள், அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக