siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பாக்கெட் உணவுகளால் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பாதுகாப்பாக மற்றும் பதப்படுத்துவற்காக பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் இந்த பொருள், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
இதுதவிர உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.

தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக