இலங்கை பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுதல், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களின் பங்கு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சமாதானம், நல்லிணக்கம் செயற்பாடுகளில் பெண்களின் பங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடியதாக பிஸ்வால் கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக