siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

குழந்தை பிறந்ததை 'ஆப்பிள்' ஸ்டைலில் விளம்பரமாக்கிய தந்தை

ஜேர்மனியில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் (Andreas Kleinke) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வலைத்தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 அங்குலம் நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது. ஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.
கூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கமெராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.
இரு ஒலிவாங்கள் (Microphones) இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.
இதன்பின் நடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும்.
அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.
பல மொழிகளை அறிந்து கொள்ளும் வகையில் இது படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் இருப்பிடம் முனிச் (Munich) ஜேர்மனி என்று கூறியதுடன், தனது குழந்தை குறித்த சுவாரிஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
9
 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .


 

0 comments:

கருத்துரையிடுக