பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பனை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்வம் ஒன்று நடந்துள்ளது.
பிரித்தானியாவின் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் (Sulaxssan) என்னும் 19 வயதான இளைஞன், தன்னுடன் பயிலும் 17 வயது மாணவன் டுஷான் சீனுவை (Dusan Sinu) தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவர் வேறு வீடு மற்றும் பள்ளிக்கூடம் என மாறிச் சென்றுள்ளார்கள்.
ஆனாலும் சுலக்ஷன் அவரை பின் தொடர்ந்துள்ளார்.சுலக்ஷன், சீனுவை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், ஒருநாள் அவர்கள் இருக்கும் புது வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.
வெளியே வராவிட்டால் கண்ணாடியை உடைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டுஷான் வெளியே வந்தவேளை அவரை முகத்தில் அடித்துள்ளார்.
இதனால் பயந்து போன டுஷான் ஓட ஆரம்பித்துள்ளார். பின்னர் தனது உடல் முழுவதும் இரத்தத்தால் நனைந்திருப்பதை உணர்ந்த டுஷான், தன்னை சுலக்ஷன் கத்தியால் குத்திவிட்டார் என்பதனையும் பின்னரே உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நல்லவேளையாக கத்தி நெஞ்சில் குத்தப்படவில்லை. மார்புக்கும் கைகளுக்கும் இடையே தான் குத்தப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பேசிய நீதிபதி, உங்களை 19 வயதில் நான் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கவலையடைகிறேன்.
நீங்கள் குத்திய கத்தி சற்று ஆழமாக ஏறி இருந்தால் கூட டுஷான் கொலை செய்யப்பட்டு இருப்பார். எனவே உங்களுக்கு 4 வருட தண்டனை வழங்குகிறேன் என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
டுஷானின் தரப்பில் பேசும்போது, சுலக்ஷன் ஏற்கனவே வெடிகுண்டு புரளி ஒன்றை செய்து, நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் என்று தெரிவிக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக