siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 நவம்பர், 2014

தூதரகத்துக்கு 24 மணி நேரத்தில் 3 மர்ம பார்சல்!


நியூசிலாந்து நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை மர்ம பார்சல் வந்துள்ளது. அதில் வெடிகுண்டுகள் அல்லது எபோலா கிருமிகள் இருக்குமோ என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமெரிக்க தூதரகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 6 மணியளவில் மர்ம பார்சல் வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையும் 2 மர்ம பார்சல்கள்
வந்துள்ளது. இந்த பார்சல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த 3 பார்சல்களிலும் எபோலா நோய் தாக்கக்கூடிய பொருட்கள் ஏதேனும் இறுக்குமோ அல்லது வெடிபொருட்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நியூசிலாந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் விரைந்து வந்து, அந்த 3 பார்சல்களையும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர். அந்த பார்சல்களில் பிளாஸ்டிக்
பாட்டில்களில் ஒரு வித திரவம் இருந்தது. பிளாஸ்டிக் பாட்டில்களில் ரசாயன பொருட்களை நிரப்பி, அத்துடன் எபோலா நோய் கிருமிகளும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பொருட்கள் நியூசிலாந்து அரசின் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று நியூசிலாந்து போலீஸ் அதிகாரி நிக் போம் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக