siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர்:??

கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை அறவே ஒழித்து விட வேண்டும் என உறுதிப்பூண்டிருந்தது. ஆயினும் இந்த உறுதியிணை இன்னும் கனேடிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதுள்ளது. ஒரு மில்லியன் கனேடிய குழந்தைகள் இன்னும் வறுமையில் வாடி வருகின்றனர்.
உலகில் செல்வந்த நாடுகளின் ஒன்றான எமது மகத்தான கனடா, நமது நாட்டில் முற்றாக வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என ஐ.நா சபையில் தெரிவித்திருந்தமை எம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம். இதன் முதல் கட்டமாக கனடாவில் வறுமையில் வாடி தவிக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளின் பட்டினியை போக்கி, அவர்களின் உணர்வினை அறிந்து அவர்களது வளர்ச்சிக்கு வழிகோல வேண்டியது கனேடிய
அரசாங்கத்தின் மிகப் பெரிய கடமையல்லவா?. பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உறங்கும் போது முழு உலகமே இருளாக இருக்கின்றது என்று எண்ணுவது போல் நமது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு கனேடிய எல்லையெங்கும் வறுமையோ பட்டினியோ இல்லை என்று கூறுவதை போல் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் வறுமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். கனடாவில் வறுமை காரணமாக ஒரு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்மையோடு வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். வறுமை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, வறுமை மற்றும் பட்டினி காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகளின் போஷாக்கின்மையும் உணவு பற்றாகுறை என்பனவும் மறுக்க முடியாத உண்மைகளாகும். யுனிசெப் அமைப்பு தனது ஆய்வறிக்கையில், கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் போஷாக்கின்மை குறித்து விபரித்து எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த நமது கனேடிய அரசாங்கம் வறுமையை முற்றாக ஒழித்து விட முடியும் என கூறியிருந்தாலும் முக்கியமாக குழந்தைகளின் வறுமை, பட்டினி மற்றும் போஷாக்கின்மையை ஒழிக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பது நம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். 25 வருடங்களுக்கு முன்னர் கனேடிய குழந்தைகளின் வறுமை நிலைமையானது 13 சத வீதமாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போது அது 23 சத வீதத்தை எட்டியுள்ளது.
கனடாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 23 சத வீதம் என்ற இந்த நிலைமையானது நமது நாட்டின் மதிப்பு உலக அரங்கில் எப்படி மதிக்கப்படும் என்பதை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். யுனிசெப் நிறுவனம், கனேடிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச
நிறுவனங்கள் முன்வந்து தேவையான போதிளவு பொருளுதவிகளை உணவு வங்கி மூலமாக வழங்கி, கனடாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குழந்தைகளை காபற்ற வேண்டியதன் அவசியத்தை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கனேடிய அரசாங்கம் குழந்தைகளின் வறுமையையும் பட்டினியையும் போஷாக்கின்மையையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். கனேடிய அரசாங்கம், குழந்தைகளின் வளர்ச்சிக்காக வீட்டுத்திட்டங்கள், குழந்தை காப்பகங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டம் ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார உதவிகள் செய்து மேற்கூறிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செயற்பட்டால், கனடாவில் குழந்தைகளின் வறுமை நிலைமையை படிப்படியாக குறைத்து, பின்னர் அதனை முற்றாக ஒழித்து விடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராதிகா சிற்சபேசன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக