இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, நாம் தனி நாடாக பிரிந்து செல்வோம் என்ற கோரிக்கையை வைத்து தீவிரமாக பிரசாரம் செய்து வந்தவர் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரான அலெக்ஸ் சல்மாண்ட். இவர் ஸ்காட்லாந்து பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இங்கிலாந்தில் இருந்து பிரிந்து செல்வதா? வேண்டாமா? என்பது குறித்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடம் எடுக்கப்பட்டது. இதில் 55.3 சதவீத மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருக்க ஆதரவு தெரிவித்தனர்.
அலெக்ஸ் சல்மாண்ட் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அலெக்ஸ் சல்மாண்ட் நேற்று அறிவித்தார்.
ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமரும், கட்சியின் புதிய தலைவரும் வருகிற நவம்பர் மாதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக