ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது.நேற்றை கூட்டத்தில் பேசிய அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. நமது நாட்டின் வான் வெளியில் வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்டுகிரது இது மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பச்சை நிற வேற்று கிரகவாசிகள் ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேள்விகேட்டனர்.
அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவித மான ஒரு பொருள் நமது நாட்டு வான் எல்லையில் பறந்ததை போர் விமானங்கள் கண்டு பிடித்துள்ளன.
ஆனால் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தனரா? என தெளிவாக கூறவில்லை. ஒருவேளை அவை பறவையாகவோ வேறு ஒரு பொருளாகவோ இருக்கலாம். னவே நமது விமான பாகாப்பு அது குறித்து தீவிரமாக கண் காணித்து வருகிறது. நமது வான்வெளியில் வேற்று கிரகவாசிகளோ அவர்களின் விண்கலங்களோ வர அனு மதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார்.
அன்டோனியோ இனோகி ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார்
0 comments:
கருத்துரையிடுக