பிரித்தானியாவில் குடிபோதையில் கார் ஓட்டிய நபருக்கு 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 நெடுஞ்சாலையில், கடந்த நவம்பர் மாதம் மார்டின் கண்ட்ரில்(43) என்பவர், மின்னல் வேகத்தில் கார் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், தனது காரை 360 டிகிரியில் சுழற்றி பிற காரோட்டிகளை கதிகலங்க செய்துள்ளார்.
இவரின் இந்த செயலை நபர் ஒருவர் வீடியோ எடுத்து பொலிசிடம் புகார் அளித்துள்ளார், இதனைத் தொடர்ந்து மார்டினை கைது செய்த பொலிசார், அவரது உடலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மூன்றரை மடங்கு ஆல்கஹால் இருப்பதை கண்டுபிடித்தனர்,
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், மார்டினை 10 மாதங்கள் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யவும், 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடைவிதித்து
தீர்ப்பளித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக