தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை தொலைபேசி தகவல்களை வைத்து கண்டறிவதற்கான ஆய்வொன்று ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு ஆப்ரிக்க நாடான கென்யாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக 1.5 கோடி மக்களின் தொலைபேசி தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தொலைபேசியில் பேசப்பட்ட நேரம், குறுந்தகவல் அனுப்பிய நேரம், அதன்போது தொலைபேசி பயனாளர் இருந்த இடம் போன்ற தகவல்கள் தொலைபேசி கோபுர, சமிக்ஞை மூலம் சேகரிக்கப்பட்டன. கடந்த 2008 ஜூன் முதல் 2009 ஜூன் வரை சேகரிக்கப்பட்ட 1,200 கோடி தொலைபேசி தகவல்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
தொலைபேசி உரிமையாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எந்த நேரத்தில் செல்கின்றனர், ஒரே இடத்தில் எப்போது இருக்கின்றனர் என்பன
போன்ற தகவல்களும் ஆராயப்பட்டன.
இத்தகவல்கள் அனைத்தும் கென்யாவில் ஆண்டிற்கு மூன்று முறை பரவலாகக் காணப்படும் ருபெல்லா எனப்படும் தொற்று நோய் பரவும் காலம் தொடர்பான தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.
ஆய்வின் முடிவில் ஆச்சரியப்படும் வகையில் தொலைபேசி உரிமையாளர்கள் இடம் பெயர்தல் தொடர்பான தகவல்கள் அமைந்த விதமும் ருபெல்லா நோய் பரவிய காலம் மற்றும் பகுதி போன்ற தகவல்கள் அமைந்த
விதமும் ஒரே மாதிரியாக இருந்தன.
கென்யாவில் ஒரு ஆண்டில், பிப்ரவரி, மே, செப்டம்பர் மாதங்களில் ருபெல்லாவின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர்த்தும் வகையில் தொலைபேசி தகவல்கள் அமைந்திருந்தன.
இதன் மூலம் தொலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய் பரவல் நிகழும் பகுதிகள், காலம் போன்றவற்றை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மோன்ற மேலதிக ஆய்வுகளும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக