siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 30 செப்டம்பர், 2015

அதிகரிக்கும் அகதிகள் வரவால் திணறும் ஜேர்மனி

அதிக எண்ணிக்கையில் அகதிகள் ஜேர்மனி நோக்கி வருவதால் போதுமான குடியிருப்பு வசதிகளை அகதிகளுக்கு வழங்குவதில் ஜேர்மனி அரசு திணறி வருகின்றது. ஜேர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிப்பதன் முக்கிய காரணமாக கருதப்படுவது, படுக்கை வசதி, உணவு மற்றும் உறவிடம். ஆனால் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு போதிய குடியிருப்பு வசதிகளை வழங்கவே அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மனியின் பல பகுதிகளில் அகதிகள் நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும்,...

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உணவகத்தில் இருமாதங்களில் இரண்டாவது தடவையும் கொள்ளை!

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க...

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

மசூதியில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் உயிரிழப்பு

பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏமனில் சண்டை அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு...

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

உயர்நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல்  தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து...

புதன், 16 செப்டம்பர், 2015

ரயில் பேருந்துடன் மோதல் உயிர் தப்பிய சிறுவர்கள் (காணொளி இணைப்பு)

ஜேர்மனியின் Hamburg பகுதியில் பேருந்துடன் ரயில் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Hamburg நகரின் புறநகர் பகுதியான Buxtehude அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து மீது விரைவு ரயில் ஒன்று மோதிக்கொண்டது. ரயில் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற நோக்கில் பள்ளிச் சிறுவர்களுடன் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில், பேருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, ரயில் வருவதையொட்டி...

புதன், 9 செப்டம்பர், 2015

இந்த சிறுமி அறிவுத் திறனில்சிறந்த சாதனை.

பிரிட்டனில் மென்சா அமைப்பு அண்மையில் நடத்திய அறிவுத்திறன் தேர்வில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவி லிடியா அதிகபட்ச அளவான 162 மதிப்பெண்களை பெற்றார். இயற்பியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் ஆகியோர் முன்பு இத்தேர்வில் 160 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது அவர் களை விட கூடுதல் மதிப்பெண் களை லிடியா பெற்றுள்ளார். அறிவுக்கூர்மை உடைய வர்களை உறுப்பினர்களாக கொண்ட உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய சங்கமாக ‘மென்சா இன்டெர்நேஷனல்’ உள்ளது....

வியாழன், 3 செப்டம்பர், 2015

குழந்தை சடலம் கடல்கரையில் ஒதுங்கியது???

துருக்கி கடல்கரையில் 3 வயது சிறுவனது உடல் கரைஒதுங்கியது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களில் நெஞ்சை பிளக்கும் விதமாக உள்ளது.  லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்  அடைந்து  வருகிறார்கள். சட்டவிரோதமாக படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக...