டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல்
தடவையாகும்.
சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை
மேற்கொண்டிருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக