siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 21 நவம்பர், 2015

ஹெலிகாப்டர் பனி பாறை பகுதியில் விபத்து: 7 பேர் பலி!!!

நியூசிலாந்து நாட்டில் பனி பாறை அமைந்த சுற்றுலா பகுதி ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.  இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நியூசிலாந்தின் தெற்கு தீவின் மேற்கு கடலோர பகுதியில் பனி பாறைகள் 
அதிகம் உள்ளன.
இதில், சுற்றுலா பகுதியாக அறியப்பட்டுள்ள பாக்ஸ் எனப்படும் பனி பாறை பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மீட்பு படையினரால் கண்டறியப்பட்டுள்ளன.  ஆனால், கடுமையான சூழ்நிலையால் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் விமானி மற்றும் 6 பயணிகளின் அடையாளம் காணப்பட்ட விவரம் வெளியிடப்படவில்லை.  மீட்பு பணி மற்றும் விசாரணை நடைபெற சில நாட்கள் ஆகும் என அவர்கள் கூறியுள்ளனர்.  ஆல்பைன் அட்வென்சர்ஸ் என்ற டிராவல் ஏஜென்சி ஒன்று இந்த ஹெலிகாப்டரை 
இயக்கியுள்ளனர்.
அவர்கள் விமானங்களை வழங்குவதுடன், பனி பாறை பகுதிகளில் தரை இறங்கி சுற்றுலா பகுதிகளை பார்வையிட தேவையான பணிகளை செய்திடுவர்.  கடந்த 2010ம் ஆண்டில் பாக்ஸ் கிளேசியர் பகுதிக்கு 
அருகிலுள்ள 
நகரிலிருந்து கிளம்பி சென்ற விமானம் ஒன்று பனி பாறை பகுதியில் வெடித்து சிதறிய சம்பவத்தில் அதில் இருந்த 9 பேரும்
 பலியாகி உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக