இங்கிலாந்தில் 81 வயது முதியவர், வந்துகொண்டிருந்த ரயிலின் மீது இஸ்லாமிய பெண் ஒருவரை பிடித்து தள்ளிய செயல் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Bakerloo ரயில் சுரங்கப்பாதையில் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தேபோது, அங்கு நின்றுகொண்டிருந்த Yoshiyuki Shinohara(81) முதியவர், பர்தா அணிந்து வந்த குற்றத்திற்காக அந்த இஸ்லாமிய பெண்ணை பிடித்துதள்ளியுள்ளார்.
இதில் அப்பெண்ணின் முகத்தில் சிறிய உராய்வு ஏற்பட்டுள்ளது, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அம்முதியவரை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக Westminster Magistrates நீதிமன்றத்தில் ஆஜரான முதியவரை, நவம்பர் 25 ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக