துருக்கியின் தெற்கிழக்குப் பகுதியில், துருக்கி இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளின் காரணமாக, குர்திஷ் போராளிகளில் குறைந்தது 102 பேர் கொல்லப்பட்டுள்ளதாதக அறிவிக்கப்படுகிறது. தவிர, 2 படையினரும் 5 பொதுமக்களும்
, இதன்போது
கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தாங்கிகளின் உதவியோடு, சுமார் 10,000 துருக்கித் துருப்புகள், இந்தப் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நகரப் பகுதிகளிலிருந்து குர்திஷ் போராளிகளை
விரட்டுவதே,
இதன் நோக்கமென அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், கடந்த புதன்கிழமை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக,
தென்கிழக்கு
நகரங்களில், ஊரடங்கைப் பிரகடனப்படுத்திய அரசாங்கம், அதற்கெதிராகப் போராடிய போராட்டக்காரர்களை, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பாய்ச்சி, விரட்டியிருந்தது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக