அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைகிறது.
இரு அவைகளும் கூடிய கூட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக, ஒபாமா இறுதி உரையை ஆற்றினார்.
துப்பாக்கி வன்முறைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது அவசியம் என ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக பரக் ஒபாமா ஆற்றும் அரச இறுதி உரையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொழிலுக்கேற்ற ஊதியம் வழங்குவதிலும், பணியாளர்களுக்கான உரிய விடுமுறைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளிடையே வல்லமையுடைய நாடாக அமெரிக்கா விளங்குவதாகவும் ஒபாமா தனது 8 ஆவதும் இறுதியுமான உரையில் கூறியுள்ளார்.
அனைத்து பிரஜைகளுக்கும் கல்வி அவசியமானது என்பதை இதன் போது அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.எஸ் ஆயுததாரிகளுடனான மோதலானது ஒருபோதும் 3 ஆவது உலகப்போராக உருவெடுக்காது எனவும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக