மத்திய பிரதேசத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த ஒருவரை ரயிலில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இடர்சி ரயில் நிலையத்தின் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவரான சுமித் என்பவர், லோக் மான்ய திலக் ரயிலில் சென்று கொண்டிருந்த போது எதிரே அமர்ந்திருந்தவர்களின் தண்ணீரை எடுத்து பருகியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சுமித்தை ரயிலில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும்
சுமித்திற்கு உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமித் அளித்த புகாரை தொடர்ந்து பீகாரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
என கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக