வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்? ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து
வருகிறார்.
ரஷ்யாவில் உள்ள சைப்பீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற ஒரு ஏழைச் சிறுவன் அங்குள்ள பள்ளியில் பயின்று பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என தீர்மானித்த அவர் கையில் உள்ள சிறிய சேமிப்புடன் கடந்த 1990ம் ஆண்டில் அவுஸ்ரேலியா நாட்டில் குடியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு சுற்றுலா ஏஜெண்டாக தனது பணியை தொடங்கியுள்ளார். பணியில் அக்கறையுடன் ஈடுப்பட்டதால் ரஷ்ய நாட்டை சேர்ந்த பலரை கவர்ந்து அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுலா வர ஏற்பாடுகள் செய்து முன்னேறியுள்ளார்.
பின்னர், சில ஆண்டுகள் கழித்து சொந்தமாக ‘பீட்ஸா உணவுகளை ஒவ்வொரு ஹொட்டலுக்கும் கொண்டு சென்று டெலிவரி செய்யும்’ நிறுவனத்தை தொடங்கி அவரே பீட்ஸாக்களை டெலிவரி செய்துள்ளார்.
ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான உழைப்பை செலுத்திய அந்த நபருக்கு தற்போதைய வயது 58 ஆகும்.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார். இவரது ஒட்டுமொத்த சொத்தின் தற்போதைய மதிப்பு 308 மில்லியன் டொலர் (4,500 கோடி
இலங்கை ரூபாய்).
இதுமட்டுமில்லாமல், அவுஸ்ரேலிய பணக்காரர்கள் வாங்குவதற்காக போராடி வந்த 4 முக்கிய வீடுகளை இவர் சில தினங்களுக்கு முன்னர் 80 மில்லியன் டொலருக்கு (1,100 கோடி இலங்கை ரூபாய்) சொந்தமாக
வாங்கியுள்ளார்.
சிட்னியில் உள்ள Coolong என்ற சாலையின் ஓரத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளன. தற்போதுள்ள இந்த 4 வீடுகளையும் இடித்து விட்டு அங்கு ஒரு புதிய ஹொட்டலை கட்ட முடிவு
செய்துள்ளார்.
வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையில் முன்னேற போராடிவரும் பலருக்கு Leon Kamenev ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக