
மைசூரு மன்னர் வாரிசு யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் இன்று மைசூரு அரண்மனையில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி 40 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மன்னர் வாரிசு
உலகப்புகழ் பெற்ற மைசூரு மன்னர் வாரிசாக யதுவீரை, மகாராணி பிரமோதாதேவி தத்தெடுத்தார். இவர் மறைந்த மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் தங்கை மகன் ஆவார். யதுவீர் மன்னர் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார்...