இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
லண்டனில் பிரபல உணவகங்களை நடத்தி வரும் 53 வயதான டேஸ் குணவர்தன என்பவரே பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள 100 பணக்காரர்களில் இவரும்
ஒருவராவார்.
லண்டனில் உயர் வகையான உணவகத்தின் 34 கிளைகள்
மற்றும் நியூயோர்க், பாரிஸ், டோக்கியோ ஆகிய நாடுகளில் பல கிளைகளையும் இவர் நடத்தி வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
டேஸ் குணவர்தன இலங்கையில் பிறந்த, இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்ப கல்வியை மேற்கொண்டு பின்னர் பிரித்தானியா சென்று அங்கு வசித்து வருகின்றார்.
பிரித்தானியாவில் மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட டேஸ் 1981ம் ஆண்டு கணக்காளராக தொழில் வாழ்க்கை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1991ம் ஆண்டு கொன்ரன் ஹோல்டிங்ஸ் என கூட்டு வர்த்தகத்திற்கு தொடர்புபட்டுள்ளார்.
லண்டனின் கோடீஸ்வர வர்த்தகரான ஸ்ரீமத் டேரன்ஸ் கொன்ரன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் 11 வருடங்கள் சேவை செய்ததன் பின்னர் உணவகம் ஒன்றின் பகுதியை கொள்வனவு செய்ததனை தொடர்ந்து அதில் இருந்து விலகியுள்ளார்.
டேஸ் குணவர்தன மேலும் ஒரு நண்பருடன் D&D என்ற பெயரில் ஹோட்டல் மற்றும் உணவக வர்த்தகம் ஒன்றை நடத்தி செல்கின்ற நிலையில் உலக புகழ் பெற்ற Pont De La Tour, Blue Pring, Lavceston Place, Sky Low Meea ஆகிய அனைத்து உணவகங்களுக்கும் உரிமையாளர் அவர் என
தெரியவந்துள்ளது.
அவருக்கு கீழ் 2300 ஊழியர்கள் வேலை செய்யும் நிலையில் அவரது வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் பவுன்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பிரித்தானியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் டேஸ் குணவர்தனவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக